சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை புரிந்து கொள்வதில் அபாரமான திறமை கொண்டவராக இருக்கிறார் என பாராட்டி பேசி இருக்கிறார்.
இவர் பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் தோனிக்கு விருப்பமானவராக இருந்து வருகிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் விளையாடிய எல்லா வீரர்கள் பற்றியும் பெரிய நெருக்கத்தைக் கொண்டவர்.
இவர் சஞ்சு சாம்சன் பற்றி பேசும்போது “நான் சந்தித்ததிலேயே மிகவும் அமைதியான வீரரான தோணியுடன் இணைந்து பணி செய்யும் பாக்கியத்தை பெற்று இருக்கிறேன். அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் இவருக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் கிடையாது. ஆட்டத்தை புரிந்து கொள்வதில் அபாரமான திறமை உள்ளது”
“மேலும் அவரிடம் விரக்தி, பதற்றம் எதையும் நான் பார்க்கவில்லை. இதெல்லாம் சாதாரண விஷயம் என்று புரிகிறது. அவர் மிகவும் அமைதியாக இருந்து செய்ய வேண்டிய விஷயங்களை சிறப்பாக செய்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

