பும்ரா பந்துவீச்சை சந்தித்து எப்படி இரண்டு சிக்ஸர்கள் அடித்தேன் என்பது குறித்து 15 வயதான வைபவ் சூரியவன்சி பேசியிருக்கிறார்.
கடந்த மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் வைபவ் சூரியவன்சி பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்தார். இதைத் தொடர்ந்து அந்த ஓவரில் இன்னொரு சிக்ஸரும் அடித்தார். இது பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்து இருந்தது.
இதுகுறித்து வைபவ் சூரியவன்சி பேசிய பொழுது “எனக்கு எதிரில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்கவில்லை நான் பந்தை மட்டுமே பார்த்தேன். ஆரம்பத்தில் பும்ரா இருக்கும்போது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனாலும் நான் எனது திறமையில் நம்பிக்கை கொண்டு பந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்”
“மேலும் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சிக்கு நான் சீக்கிரம் சென்றேன். குறுகிய தூரத்திலிருந்து பந்தை வேகமாக வீசவைத்து பயிற்சி செய்தேன். இது எனக்கு மும்பை போட்டியில் மிகவும் உதவியாக இருந்தது. என்னுடைய பேட்டிங்கில் சில விஷயங்களை மேம்படுத்த நினைத்து இதைச் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

