நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இந்த போட்டியில் தான் எவ்வாறு திட்டமிட்டேன் என ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேசியிருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 32 பந்தில் 77 ரன்கள், வைபவ் சூர்யவன்சி 14 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 123 ரன்கள் எடுத்தது.
இது குறித்து ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “யாரை யார் தாக்கி விளையாடலாம் என யோசித்து கொண்டு இருந்தேன். தீபக் சகர் வந்ததும் நான் அவரது ஓவரை எடுத்துக் கொண்டேன். பும்ரா ஓவரை அடிக்கச் சொல்லி சூரியவன்சியை சொன்னேன். தொடர்ந்து யோசித்துக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன்”
“வைபவ் சூரியவன்சி மிகவும் அருமையாக விளையாடுகிறார். இதன் காரணமாக நானும் புதிய ஷாட் விளையாட ஊக்கம் கிடைக்கிறது. அவர் இயல்பாகவே ஆட்டத்தை புரிந்து கொண்டு விளையாடக்கூடிய அளவுக்கு சிறப்பாக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

