நேற்று சன் ரைஸர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி இளம் வீரர் ரகுவன்சி விராட் கோலியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என சேவாக் கூறியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ரகுவன்சி இரண்டு அரை சதங்கள் தொடர்ந்து அடித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் அவர் கடைசி வரையில் விளையாடியிருந்தால் கேகேஆர் அணியை வெற்றி பெற வைத்திருக்க முடியும்.
இது குறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது ” ரகுவன்சி மிகவும் திறமையாக விளையாடுகிறார். இந்த போட்டியில் அவர் 18 முதல் 20 ஓவர்கள் வரை விளையாடியிருந்தால் அவர்கள் அணியை வெற்றி பெற வைத்திருக்க முடியும். இப்படியான வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
“மேலும் விராட் கோலியிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ரன் சேஸ் செய்வது எப்படி என கற்றுக் கொள்ள வேண்டும். நேற்று ரகுவன்சி இதை செய்திருந்தால் ஒரே இரவில் ஸ்டார் வீரராக மாறி இருக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

