நேற்று ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மிக மோசமாக பந்து வீசி ஆர்சிபி அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து கேப்டன் இஷான் கிஷான் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி இறுதி வரையில் நின்று வெறும் 38 பந்துகளில் 69 ரன்கள் குறித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இன்னொரு முனையில் படிக்கல் வெறும் 26 பந்தில் 61 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவருமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை போட்டியை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.
இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது ” முதல் நான்கு ஓவர்கள் எங்களுக்கு பேட்டிங் செய்யும்பொழுது கடினமாக இருந்தது. நாங்கள் அடுத்த போட்டியில் இருந்து ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு விளையாட முயற்சி செய்ய வேண்டும். விக்கெட் வேகமாக விழுந்தாலும் நாங்கள் 200 ரன் எடுத்தது எங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கிறது”
“மேலும் விராட் கோலி விக்கெட்டை ஆரம்பத்திலேயே ஒரு அணியால் கைப்பற்ற முடியாவிட்டால் நீங்கள் அவரை வீழ்த்துவது மிகவும் கடினம். எங்களால் அவர் விக்கெட்டை ஆரம்பத்தில் வீழ்த்த முடியாமல் போய்விட்டது” என்று கூறி இருக்கிறார்.

