நேற்று 19வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் இறுதிவரை களத்தில் நின்ற ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். பிறகு பிரசன்டேஷனில் அவரிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக நிறைய ஓய்வில் இருந்து திரும்பி வந்து விளையாடுவது குறித்து கேட்கப்பட்டது.
இது குறித்து விராட் கோலி பேசும் பொழுது தனக்கு தேவையான ஓய்வு கிடைப்பதால் தான் புத்துணர்ச்சியாக வந்து விளையாட முடிகிறது, இது எனக்கு நல்ல பலனையே ஆட்டத்தில் கொடுக்கிறது என்று கூறியிருந்தார்.
மேலும் ஒரு வீரராக அணியில் இடத்தை பிடித்து வைத்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்கக் கூடாது, கடுமையாக உழைத்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்த கருத்து விராட் கோலி தோனியை மறைமுகமாக விமர்சித்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் தற்போது இது வைரலாக மாறிக்கொண்டிருக்கிறது.

