தற்போது சிஎஸ்கே அணிக்கு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கும் இளம் வீரர் பிரசாந்த் வீர் மகேந்திர சிங் தோனி மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டு வந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது.
நேற்று இந்த இளம் வீரர் பயிற்சி செய்ய பின்னால் இருந்து மகேந்திர சிங் தோனி ஆலோசனைகள் கூறி வழி நடத்தினார். மேலும் அவர் சிறப்பான ஷாட் விளையாடிய போதெல்லாம் பின்னால் இருந்து பாராட்டினார்.
இந்த பயிற்சியில் பிரசாந்த் வீர் முதல் பந்தை கவர் திசையிலும், இரண்டாவது பந்தை ஸ்கூப் முறையிலும், மூன்றாவது பந்தை நேராகவும் அடித்து அசத்தினார். இந்த மூன்று முறையும் தோனி பின்னால் இருந்து பாராட்டினார்.
தற்போது ரவீந்திர ஜடேஜா இடத்திற்கு இந்த வீரர் வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா ரோல் சிஎஸ்கே அணியில் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் இல்லாத நிலையில் அந்த இடத்திற்கு இளம் வீரரை தோனியை களத்தில் இறங்கி தயார் செய்து வருகிறார்.

