இந்திய t20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவிடம் எப்போது ஓய்வு என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. மேலும் அவர் தற்போது கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருவது குறித்தோம் கேள்வி. இதற்கு சூரியகுமார் யாதவ் வெளிப்படையான முறையில் பதில் அளித்திருக்கிறார்.
இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” இப்போது விஷயங்கள் நல்லபடியாக தானே சென்று கொண்டிருக்கிறது. நான் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்த நிலையில் ஓய்வு பெற வேண்டும். நான் ஐபிஎல் விளையாடிவிட்டு அடுத்து ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தயாராவேன்”
“மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விக்கெட் விழும் பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது போலவும், அடுத்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ற வகையிலும், இறுதியாக கடைசி சில ஓவர்களுக்கு டி20 கிரிக்கெட் போலவும் விளையாட வேண்டும். ஆனால் கடைசிவரையில் என்னால் இதை புரிந்து கொள்ளவே முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்

