சாம்சனுக்கு கம்பீர் செய்ததை தோனி செய்ய மாட்டார்.. ஐபிஎல் தொடரில் இதுதான் நடக்கும் – சஞ்சய் பாங்கர் பேட்டி

இந்த ஆண்டு 19 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து சஞ்சய் பாங்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் துவக்க வீரராக வாய்ப்புக் கொடுத்திருந்தார். இதில் சிறப்பாக விளையாடி அசத்தி ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக சஞ்சு சாம்சன் சாதனை படைத்தார். ஆனால் சிஎஸ்கே அணியில் ரோல் மாறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது “ருதுராஜ் துவக்க ஆட்டக்காரராக வந்து தான் இதுவரையில் மிகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். கடந்த முறை அந்த இடத்தை மாற்றினார்கள். ஆனால் அது அனுப்பி மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்காமல் தோல்வியை கொடுத்து விட்டது. எனவே இந்த முறை அவர் துவக்க இடத்தில் வரவேண்டும்”

- Advertisement -

“அவர் ஆயுஷ் மத்ரே உடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும். சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் வருவது சரியானதாக இருக்கும். நான்காவது இடத்தில் டிவால்ட் பிரிவிஸ் இருப்பார். இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் சிவம் துபே இல்லையென்றால் கார்த்திக் சர்மா விளையாடலாம். இதுதான் அவர்கள் பேட்டிங் யூனிட்டை பலமானதாக மாற்றும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles