இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவரில் 180 ரன்கள் குவித்தது.
தென்னாபிரிக்க அணி ஓரளவு கட்டுக்கோப்பாகவே பந்து வீசியது. எனினும் இந்திய அணித் தரப்பில் திலக் வர்மா 29, சூர்யகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68 ரன்களை விளாசினர். தென்னாபிரிக்க அணித் தரப்பில் கோட்சி 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன், மார்க்ரம், சம்சி, வில்லியம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தனர்.
ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணிக்கு ஹென்றிக்ஸ் (49) மற்றும் மார்க்ரம் (30) ஆகியோரின் குறிப்பிடத்தக்க ஸ்கோர் உதவியுடன் 15 ஓவர்களில் 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணித் தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தனர்.
4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்திய சம்சி ஆட்ட நாயகன் ஆக அறிவிக்கப்பட்டார். எனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதில் ரிங்கு சிங் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். ரிங்கு சிங் விளையாடியதில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
ஆட்டத்தின் 19வது ஓவரில் கேப்டன் மார்கரம் வீசிய கடைசி பந்தில் அவர் அடித்த சிக்சர் நேராக சென்று மைதானத்தின் கண்ணாடியை நொறுக்கியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
இது குறித்து ரிங்கு சிங் பேசுகையில்,
“நான் அடித்த சிக்சர், மைதானத்தில் உள்ள மீடியாரூம் கண்ணாடியை உடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்த பிறகுதான் அது குறித்து தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் பேட்டிங் செய்ய வரும் பொழுது இந்திய அணி சிக்கலில் இருந்தது. நான் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு விளையாடிய போது, சூர்யா பாய் என்னிடம் நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடு என்று கூறினார். ஆட்டத்தின் சூழல் புரிய நான் தொடக்கத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன்.
பிறகு பெரிய ஷாட்களுக்குச் செல்ல அதுவே எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
சூர்யாபாய் என்னை சரியாக வழி நடத்தினார்” என்று கூறினார். 3வது போட்டி வரும் வியாழன் நடை பெற உள்ளது.

