இந்திய வீரர் அபிஷேக் சர்மா டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று டக் அவுட் ஆனபோது அணி நிர்வாகத்திடம் இருந்து என்ன உத்தரவு வந்தது என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா இறுதிப்போட்டியில் மட்டுமே மிகச் சிறப்பாக அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடினார். ஆனால் அவரது முதல் மூன்று போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இதுகுறித்து அபிஷேக் ஷர்மா தெரிவிக்கும் பொழுது ” இந்த சூழ்நிலை உங்களுக்கு போக போக பழகிவிடும். ஆனால் முதலில் உங்களுக்கு வரும் விமர்சனங்கள் மோசமானதாக இருக்கும். ஏனென்றால் உங்களிடமிருந்து ரசிகர்கள் மிகவும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது கடுமையான விமர்சனம் வரும்”
“நான் மூன்றாவது டக் அவுட் ஆனதும் கம்பீர், சூர்யா மற்றும் ஹர்திக் பாய் மூவரும் என்னிடம் மொபைலில் சோசியல் மீடியா அப்ளிகேஷன்களை டெலிட் செய்ய சொன்னார்கள். நான் உடனே அதை செய்ததும், எனக்கு அது பலன் கொடுத்தது. அங்கு என் குறித்து நிறைய கருத்துக்கள் இருந்தது. நான் அதில் இருந்து வெளியில் இருக்க உதவியாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

