எங்க இங்கிலாந்து டீம்ல பும்ரா இருந்திருந்தா இந்தியா தோத்து வெளிய போயிருக்கும்.. உலகக் கோப்பையை சும்மா ஜெயிச்சிருப்போம் – மைக்கேல் வாகன் பேச்சு

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் பும்ரா இருந்திருந்தால் இந்திய அணியை தோற்கடித்து இங்கிலாந்து உலகச் சாம்பியன் ஆக மாறி இருக்கும் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் வாகன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மேலும் தான் கிரிக்கெட் பார்த்ததில் பும்ராதான் தலைசிறந்த பவுலர் என்றும் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது ” ஒருவேளை டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் பும்ரா இருந்திருந்தால் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டிருக்கும். இங்கிலாந்து உலக கோப்பையை வென்றிருக்கும். இரண்டு அணிகளுக்கும் வித்தியாசமான வீரராக அவர்தான் இருந்தார்”

- Advertisement -

“நான் இதுவரை கிரிக்கெட் பார்த்து வந்ததில் அவர்தான் தலைசிறந்த பவுலர். ஆஸ்திரேலியாவில் தட்டையான ஆடுகளத்தில் அவர் எவ்வளவு அற்புதமாக வந்து வீசினார் என்று நான் நேரில் பார்த்திருக்கிறேன். ரொனால்டோ, மெஸ்ஸி போல அவர் அபார திறமை கொண்டவர்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles