இந்தியாவுக்கு 1.4 பில்லியன் ரசிகர் இருக்காங்க.. நியூசிலாந்து ரசிகர்களே எங்களுக்காக இதை செய்யுங்க – சான்ட்னர் வேண்டுதல்

இன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிச்சல் சான்ட்னர் தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்த போட்டியில் இந்திய அணிக்கு முழு ஆதரவும் இருக்கும்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும்போது “ஞாயிற்றுக்கிழமையில் உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். இங்கு இந்தியாவுக்கு 1.4 பில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மைதானம் முழுக்க அவர்களுடைய ரசிகர்களே இருப்பார்கள். நீங்களும் எங்களுக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று தெரியும்”

- Advertisement -

“நம் நாட்டு நேரத்திற்கு அதிகாலையில் போட்டி ஆரம்பிக்கிறது. எனவே அலாரம் வைத்து எழுந்து பார்த்து ஆதரவு கொடுங்கள். நீங்கள் கல்லூரி, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றால் நான் சொன்ன செய்தியை சொல்லுங்கள். நாங்கள் விரைவில் நாடு திரும்புவோம். எங்களுடன் ஒரு உலகக் கோப்பையையும் கொண்டு வரலாம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles