இந்தியா பயப்படும் ஒரே அணி நியூசிலாந்து.. பின் ஆலன் ஒட்டுமொத்தமா சைலன்ட் பண்ணிடுவார் – பிராட் ஹாடின் கருத்து

நாளை t20 உலக கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து வெல்லும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாடின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக நியூசிலாந்து அணி இந்தியாவில் வைத்து இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் வென்று உள்ளது. மேலும் முதல் செமி பைனல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடியான வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பிராட் ஹாடின் கூறும்பொழுது ” நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்று விட்டால் இந்தியாவின் கொண்டாட்டத்தை சீர்குலைக்க கூடிய ஒரு வீரராக மாறிவிடுவார். மேலும் இந்தியா இந்த உலகக் கோப்பை தொடர்பு வந்த பொழுது தாங்கள் சந்திக்கவே கூடாது என நினைத்த ஒரே அணி நியூசிலாந்துதான்”

- Advertisement -

“இந்தியாவுக்கு எதிராக அவர்கள் இந்தியாவில் விளையாடினாலும் பயப்படுவது கிடையாது. அவர்கள் சிறப்பாக இந்திய மண்ணில் விளையாடுகிறார்கள். அதே மனநிலையுடன் வந்து, பின் ஆலன் சுதந்திரமாகவும் இருந்தால் நியூசிலாந்து அணி இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles