பும்ராவும் மனுஷன் தானே.. அவருக்கு நாங்க பயப்பட மாட்டோம்.. ஏற்கனவே செஞ்சி விட்டுருக்கோம் – கிளன் பிலிப்ஸ் அதிரடி

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனலில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் செயல்பாடு மிக அபாரமாக இருந்தது. எனவே பைனலிலும் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் தாங்கல் பும்ரா பந்துவீச்சை பார்த்து பயந்து கொள்ள மாட்டோம் என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் அவருக்கு எதிராக பதுங்கியும் விளையாட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் பொழுது “நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உம்ராவும் ஒரு மனிதர் தான். அவருக்கும் ஒரு மோசமான நாள் இருக்கும். அப்படிப்பட்ட மோசமான நாளை நாங்கள் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வோம். நாங்கள் அவருக்கு எதிராக பதுங்கி விளையாட மாட்டோம். அவர் சிறப்பாக இருந்தால் அதற்கு தகுந்தபடி விளையாடுவோம்”

- Advertisement -

“மேலும் இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடரில் நாங்கள் அவருக்கு எதிராக எப்பொழுதும் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். அவர் சிறந்த வீரர் என்றாலும் அதற்காக நாங்களாக பாதுகாப்பாக அவரிடம் விளையாட வேண்டும் என்று முடிவு செய்ய மாட்டோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles