நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியில் அபிஷேக் சர்மாவை நீக்கி ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா பேட்டிங் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக இருந்து வருகிறது. பெரிய அணிகளுக்கு எதிராக அவரால் திறமையாக விளையாட முடியவில்லை. இந்திய அணி பவர் பிளேவில் எடுத்ததுமே அவரால் விக்கெட்டை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இது குறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” டி20 கிரிக்கெட் வடிவத்தில் திடீரென எந்த பெரிய மாற்றத்தை வேண்டுமானாலும் செய்யலாம். வெஸ்ட் இண்டிஸ் கூட அவர்களது தொடக்க ஆட்டக்காரரை இந்தியாவுக்கு எதிராக மாற்றி இருந்தது. சரியாக விளையாடாத பையன் உள்ளே இருக்கும் பொழுது நன்றாக செயல்படக்கூடிய பையன் ஏன் வெளியில் இருக்க வேண்டும்? எனவே அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு ரிங்கு சிங்கை கொண்டு வர வேண்டும்”
“மேலும் சஞ்சு சாம்சன் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் ஏற்கனவே தன்னை நிரூபித்த ஒரு வீரர். ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் பத்து இடத்தில் வருவார். அவரும் அபிஷேக் ஷர்மாவும் ஒன்று கிடையாது. எனவே இவரை நாம் தாராளமாக நீக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

