பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் இந்திய வீரர் அபிஷேக் சர்மா பற்றியும் கருத்துக்கள் கூறி வந்ததற்கு இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது முகமது அமீர் மீண்டும் இதற்கு பதில் அளித்து இருக்கிறார்.
முகமது கைஃப் தன்னுடைய விமர்சனத்தில் அமீர் எல்லாம் தெரிந்து கொண்டே இந்தியாவில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசுவதாகவும், எனவே நாம் அவர்களுடைய பேச்சை பொருட்படுத்தக் கூடாது எனவும் விமர்சனம் செய்திருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முகமது அமீர் பேசும் பொழுது ” நான் மொத்தம் 350 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறேன். முகமது கைஃப் வெறும் 29 போட்டிகள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்திய அணிகள் கூட கங்குலி பீல்டிங் நன்றாக செய்வார் எனதான் இவரை வைத்திருக்கிறார். இப்படிப்பட்டவர் என்னை பேசக்கூடாது என்று சொல்கிறார். இவர்தான் என்னைப் பற்றி பேசி பாகிஸ்தானில் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்”
“இது இந்த இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருந்திருந்தால், நான் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று சொல்லி இருப்பேன். இந்த அணி திறமையானது இல்லை என்று நான் நினைப்பதால்தான் இப்போது உலகக் கோப்பையை வெல்லாது என்று சொல்கிறேன். இதில் எங்கிருந்து நான் கவனம் ஈர்க்க செய்கிறேன்? கிரிக்கெட் வீரராக முகமது கைஃப் இப்படி நடந்து கொள்ளக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

