இந்த போட்டியை ஜெயிக்க முக்கிய காரணம் இவர்தான்.. நாங்க எல்லாரும் சேர்ந்து இதை பிளான் பண்ணினோம் – சஞ்சு சாம்சன் தகவல்

இன்று டி20 உலகக் கோப்பை இரண்டாவது செமி பைனல் போட்டியில் இங்கிலாந்து வழியை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் 42 பந்தில் 89 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டி குறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “நாங்கள் இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். எனவே இங்கு எந்த ஸ்கோரும் பாதுகாப்பானது இல்லை என்று எங்களுக்கு தெரியும். மேலும் அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்ததும் 250 ரன்கள் தேவை என்று நான் உணர்ந்தேன். மேலும் வெளியில் இருந்த அணி நிர்வாகமும் இதே இலக்கை முடிவு செய்திருந்தது. நான் என்னுடைய பார்மை தொடர முடிவு செய்தேன்”

- Advertisement -

“இந்த போட்டியில் பும்ரா கடைசியாக வீசிய இரண்டு ஓவர்கள் மிகவும் முக்கியமானது. அவர் மிகவும் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிட்டால் நான் இந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles