உண்மைய சொல்றன் பெரிய மேட்ச்ல சூரியகுமார் ரன் அடிக்கலனா எப்படி ஜெயிக்கிறது.. இது நடந்தாகனும் – ஹர்பஜன் சிங் கோரிக்கை

இன்று டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் பெரிய போட்டிகளில் பெரிய அணிகளுக்கு எதிராக சூரியகுமார் யாதவ் ரன்கள் எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் சூரியகுமார் யாதவ் பெரிய அணிகளுக்கு எதிராக பெரிய போட்டிகளில் ஜொலிக்க தவறிவிட்டார். அவர் எப்பொழுதுமே இதே போல செயல்பட்டு வருவதாக அவர் மீது பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பெரிய போட்டியிலும் அவர் ரன்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” தற்பொழுது இந்திய அணி பேட்டிங் பவுலிங் என கொஞ்சம் முன்னேற்றம் அடைந்து மேலே வந்துள்ளது. யாராவது ஒரு வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் பெரிய அணிகளுக்கு எதிராக பெரிய போட்டிகளில் ரன்கள் எடுக்க வேண்டும்”

- Advertisement -

“மேலும் இந்திய அணி தனது திறமையில் 75 சதவீதத்தை வெளிப்படுத்தி விளையாடினால் இங்கிலாந்து அணியை எளிதாக தோற்கடிக்க முடியும் என்பதுதான் உண்மை. நான் இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று உறுதியாக சொல்கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles