இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இந்திய அணி இரண்டாவது செமி பைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் விளையாட இருக்கிறது. இன்று முதல் செமி பைனலில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகின்றன.
இதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவர் குறித்தும் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது “சஞ்சு ஒரு கட்டத்தில் மிகவும் கொடூரமான சூழ்நிலையில் இருந்தார். விளையாட்டு உங்களை இப்படி மோசமாகவும் அணுகும். ஆனால் அவர் அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார். இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்”
“மேலும் அபிஷேக் சர்மா டெக்னிக் பற்றி கவலைப்படாதவர். அவருக்கு இரண்டு நல்ல ஷாட் கிடைத்தால் மீண்டும் ரிதமுக்கு வந்து விடுவார். அவர் நன்றாக விளையாடிய நினைவுகளை மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வந்து, நாளை பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

