முன்னாள் கோச் சொல்றேன்.. சஞ்சு இப்படி ஆடினதுதான் ஸ்பெஷல்.. அதுதான் டர்னிங் பாயிண்ட் – ரவி சாஸ்திரி பேச்சு

நேற்று இந்திய அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் பேட்டிங் பற்றி இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் காட்டிய நிதானம் மற்றும் அமைதி இதுவரையில் ரசிகர்கள் பார்க்காததாக இருந்தது. அவர் வெற்றி பெற்ற பிறகும் கூட பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. மிகவும் அமைதியாக இருந்து வெற்றிகரமாக போட்டியை இந்தியா பக்கம் முடித்துக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரவி சாஸ்திரி தனது பாராட்டில் “இது மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த ஆட்டம். நேற்று அவர் பேட்டிங் செய்யும் பொழுது எந்த இடத்திலும் தன்னுடைய நிதானம் மற்றும் அமைதியை விட்டு தரவில்லை. ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டு இருந்தாலும், அவர் தொடர்ந்து தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தார்”

- Advertisement -

“நேற்று அவருக்கு பேட்டிங் டைமிங், அடிப்பதற்கு இடம், அதிரடியாக ஆடும் சக்தி மற்றும் கிளாஸ் என எல்லாமே இருந்தது. நேற்று முழுக்க முழுக்க ஆட்டம் அவருடைய கட்டுப்பாட்டில் அமைந்தது. அவர் இன்னும் பல போட்டிகள் இப்படி விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles