இந்திய வீரர்கள் இல்லை.. இந்த 2 பேர்ல ஒருத்தருக்கு தான் உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் – ஸ்ரீகாந்த் நம்பிக்கை

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெறுவதற்கான போட்டியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணியைப் பொறுத்தவரையில் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் இருவரும் 200 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகள் தாண்டி எடுத்திருக்கிறார். மற்றபடி இந்திய அணியில் இருந்து பெரிய பங்களிப்புகள் எதுவும் வரவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மன்ஸ் நிறைய வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக விராட் கோலியின் சாதனையை தற்போது பாகிஸ்தானின் ஃபர்கான் முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” தற்போது தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் மார்க்ர்ம், இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் இவர்கள் இரண்டு பேரும்தான் முன்னணியில் இருக்கிறார்கள். மேலும் இவர்களில் ஒருவர் உறுதியாக இந்த விருதை வெல்வதற்கு செமி பைனல் மற்றும் பைனலில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles