நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அது செமி பைனலுக்கு முன்னேறும். எனவே இது கால் இறுதி போட்டி போல அமைந்துள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 256 ரன்கள் குவித்து சிறப்பான முறையில் பேட்டிங் செய்திருக்கிறது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் 83 ரன்னுக்கு ஏழு விக்கெட் இழந்தும் கூட 176 ரன்கள் என்று முடித்து இருக்கிறது. எனவே அந்த அணியை குறைவாக மதிப்பிட முடியாது.
தற்போது வரும் சக்கரவர்த்தி மிடில் ஓவர்களில் தாக்கத்தை செலுத்த தவறுகின்ற காரணத்தினால், அர்ஸ்தீப் சிங்கை வெளியில் வைத்துவிட்டு குல்தீப் யாதவை கொண்டு வரலாம் என்றும் ஒரு பேச்சு வெளியில் செல்கிறது. அதே சமயத்தில் கம்பீர் இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக்கை அவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே கடந்த போட்டி அணியை களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய பிளேயிங் லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், வரும் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

