வெஸ்ட் இண்டீஸ் சிக்ஸர் அடிக்க எங்க அப்பா அப்யூஸ் பண்ணி கத்தினார்.. அப்புறம் இப்படித்தான் சமாதானம் பண்ணினேன் – அர்ஸ்தீப் சிங் சுவாரசிய தகவல்

நேற்று வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெல்லும் பொழுது இந்திய அணி ரன் ரேட் பிரச்சனை இல்லாமல் தொடர்ந்து விளையாடலாம் என்கின்ற சூழ்நிலை காணப்பட்டது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிவென்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 83 ரன் எடுத்து ஏழு முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பல கோடிக்கைக்கான இந்திய ரசிகர்களை இது பெரிய மகிழ்ச்சியில் வாழ்த்தியது. ஆனால் அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி 176 ரன்கள் எடுத்து இந்திய ரசிகர்களின் மகிழ்ச்சியில் மண்ணள்ளி போட்டது. இது இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் குடும்பம் வரையில் நடந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து அர்ஸ்தீப் சிங் பேசும்பொழுது ” நேற்று என்னுடைய ஹோட்டல் அறையில் நாங்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தோம். அப்போது தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியை பார்த்துக் கொண்டு இருந்தோம். இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் சிக்ஸர்கள் அடித்து ரன்னை உயர்த்த ஆரம்பித்ததும் என் தந்தை இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கோபமாக கத்த ஆரம்பித்து விட்டார். அவர் அப்யூஸ் செய்ய தொடங்கினார். பிறகு நான் அவரை தென் ஆப்பிரிக்க வெற்றிக்காக வேண்டிக் கொள்ளும்படி சமாதானப்படுத்த வேண்டியதாக இருந்தது” என்று சுவாரசியமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles