பாபர் நேத்து நீ பண்ணது கிரிமினல் குற்றம்.. இன்னும் எத்தனை நாளைக்கு எங்களை இப்படி பண்ணுவ? – இமாத் வாசிம் கோபம்

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த பாபர் அசாம் 24 பந்துகளை எதிர் கொண்டு 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து, பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்திற்கு பெரிய முட்டுக்கட்டையை போட்டு எரிச்சலை ஏற்படுத்தினார்.

- Advertisement -

மேலும் அவர் ஜெமி ஓவர் டன் பந்தில் கிளீன் போல்ட் ஆன விதம் மிகவும் மோசமானதாக இருந்தது. இது பாகிஸ்தான் ரசிகர்களை மட்டும் இல்லாமல் பாபர் அசாம் உடன் இணைந்து விளையாடிய வீரர்களையும் பெரிய கோபப்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பாபர் அசாம் உடன் இணைந்து விளையாடி உள்ள இமாத் வாசிம் பேசும் போது “பாபர் அசாம் இன்னும் நீங்கள் எத்தனை நாள் அணிக்குள் இருந்து இப்படியான குழப்பங்களை விளைவிக்கப் போகிறீர்கள். நேற்று 24 பந்துகளை எதிர் கொண்ட பிறகும் ஆட்டம் இழந்த விதம் கிரிமினல் குற்றம். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது”

- Advertisement -

“மேலும் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக சில குறிப்பிட்ட வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு கொண்டே வருகிறது. ஆனாலும் நாம் இங்கு அமர்ந்து அந்த வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். பாபர் அசாம் கையை உயர்த்தி தனது தவறை ஏற்றுக்கொள்வாரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles