நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதோடு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றால்தான் செமி பைனலுக்கு முன்னேற முடியும் என்கின்ற சூழ்நிலை இருக்கிறது.
அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைய வேண்டும், இல்லையென்றால் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரைட் லெப்ட் காம்பினேஷனுக்காக திலக் வர்மாவை நீக்கிவிட்டு அபிஷேக் ஷர்மா உடன் சஞ்சு சாம்சனை களம் இறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் வாஷிங்டன் சுந்தரை உள்ளே வைத்துக் கொண்டு, தற்போது குடும்ப காரணத்திற்காக இந்திய அணியை விட்டு வெளியேறி இருக்கும் ரிங்கு சிங்கை நீக்கி, அவருடைய இடத்திற்கு அக்சர் படேலை கொண்டு வரும் திட்டம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். நாளை இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இந்திய பிளேயிங் லெவன் : அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

