ஜிம்பாப்வே மேட்ச்.. திடீரென இந்திய அணியை விட்டு வெளியேறி சென்ற ஸ்டார் வீரர்.. என்ன காரணம்? – வெளியான முக்கிய செய்திகள்

இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் திடீரென சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய நட்சத்திர வீரர் வெளியேறி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இந்திய அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயத்தில் குறைந்தபட்சம் வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைய வேண்டியதும் முக்கியமாக உள்ளது. தற்போது இந்திய அணி தனது வெற்றியை மட்டுமே நம்பி இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் பினிஷர் ரோலை செய்து வந்த ரிங் சிங் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக இந்திய அணியை விட்டு வெளியேறி இருக்கிறார் என உள் வட்டார செய்திகள் தெரிவிக்கிறது. அதே சமயத்தில் அவர் மீண்டும் இந்திய அணியுடன் எப்போது இணைவார் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்திய அணி ஏற்கனவே பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் முக்கிய பேட்ஸ்மேன் வெளியேறி இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles