IND vs SA.. தெறிக்க விடும் இந்திய பிளேயிங் லெவன்.. கம்பீரின் 2 அதிரடி மாற்றங்கள் – வெளியான செய்திகள்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்திய அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் தங்களது முதல் சுற்றில் ஒரு போட்டியை கூட தோற்காமல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இந்திய அணியில் திலக் வர்மா மெதுவாக ரன் எடுப்பது பிரச்சனையாக மாறி உள்ளது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் அணி கொண்டு வரப்படலாம் என்று உறுதியான தகவல்கள் வெளிவந்திருக்கிறது. மேலும் சஞ்சு சாம்சன் நேற்று நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தென் ஆப்பிரிக்கா அணியில் நிறைய இடதுகை வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் இடத்துக்கு வலதுகை சுழல் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்படுகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. எனவே நாளை இந்த இரண்டு மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles