பாண்டியா போல பதிராணா-யும் தூக்க நினைத்ததா மும்பை?.. அவரின் பதிவால் எழுந்த சர்ச்சை.. நடந்தது என்ன?

ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை டிரேடிங் முறையிலும், ஏலத்திலும் எடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் தங்கள் அணிக்கு வாங்கியது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே சிறிது சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பை அணியில் விளையாடிய கேமரூன் கிரீன் பெங்களூர் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா முதன்முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் அறிமுகம் செய்யப்பட்டார். பவர் ஹிட்டர் ஆன இவர் மிடில்ஆர்டரில் களம் இறங்கி பல மேட்ச்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வென்று கொடுத்துள்ளார். ஆல் ரவுண்டரான இவர் வேகப்பந்து வீச்சிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அணிக்கு வழங்கியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல்இல் இரண்டு புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா கழற்றி விடப்பட்டார். புனே அணிக்கு பஞ்சாப் அணியில் விளையாடிய கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இன்னொரு அணியான குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்தது.

ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாடிய குஜராத் அணி, 2022ல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதைத்தொடர்ந்து இந்திய டி20 அணிக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்து குஜராத் அணி சிறப்பாக செயல்பட்டது.

- Advertisement -

வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி திரும்பவும் வாங்கிக் கொண்டது அனைவரையும் கேள்விக்கு உள்ளாக்கியது. ஆனால் குஜராத் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியா விரும்பித்தான் மும்பை அணிக்கு செல்கிறார் என்றும் அவரது தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்றும் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் மதீஷா பத்திரானா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “பணத்தால் விசுவாசத்தை என்றும் விலைக்கு வாங்க முடியாது” என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு மும்பை இந்தியன்ஸ் அணி பத்திரானாவையும் விலைக்கு வாங்க முயற்சித்ததா? என்று கேள்வி எழுப்பியது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மலிங்கா தற்போது அந்த அணியில் பயிற்சியாளராக உள்ளதால், இது உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும் இது குறித்துத் தெளிவான விளக்கத்தை, பத்திரானாவின் மேலாளர் அமிலா கலுகலகே தற்போது கூறியிருக்கிறார். அதில்
“தற்போது பரவி வரும் கருத்து வேடிக்கையானது. மும்பை இந்தியன்ஸ்க்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படம் கடந்த வாரம் இலங்கை திரும்பும் போது எடுக்கப்பட்டது”. என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles