டி20ல் நோ கோலி, ரோஹித்.. உண்மை காரணத்தை உடைத்த இந்திய பவுலிங் கோச்.. T20 உலகக் கோப்பையில் வாய்ப்பு இருக்கா.?

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் மற்றும் கோலியின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட டி20 அணி உருவாக்கபட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது.

- Advertisement -

டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா t20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்மான் கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். ஒருநாள் போட்டித் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி அந்நிய மண்ணில் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கும். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் தற்போது இடம் பெற்றுள்ளது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்கள் டி20 தொடரில் இடம் பெறாதது சிறிது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இவர்கள் இருவரும் டி20 தொடரில் புறக்கணிக்கப்படுகிறார்களா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே இது குறித்துக் கூறுகையில்
” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு தற்போது விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு டி20 போட்டிகள் முக்கியத்துவம் இல்லை என்பதில் அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு இளம் வீரரும் அணியில் பேலன்ஸ் செய்ய வேண்டிய சமநிலை உள்ளது.

விராட் மற்றும் ரோஹித் எல்லா தொடர்களிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அது ஐபில் மற்றும் டி20 தொடர் எதுவாக இருப்பினும் தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இளம் வீரர்கள் இருதரப்புத் தொடர்களில் விளையாடும் பொழுது விளையாட்டு விழிப்புணர்வு, அழுத்த சூழ்நிலைகளில் அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளில் எவ்வாறு தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இத்தொடர் உதவியாக இருக்கும்.

மேலும் இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட சிவப்புப் வந்து கிரிக்கெட்டையே அதிகம் விரும்புகிறார்கள். ஒரு சிலர் எல்லா வடிவ கிரிக்கெட்டையும் விளையாடி, தங்களின் ஆட்டமும் திறமையும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் வீரர்கள் சிவப்புப் பந்து கிரிக்கெட் விளையாடுவதையே அதிகமாக நேசிக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles