பந்து சைடுல இருந்து வருது.. நின்னு போடுறாரு.. பாகிஸ்தான் பவுலர் த்ரோ பண்றாரா? – அஸ்வின் கொடுத்த ஸ்டேட்மெண்ட்

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்துவீச்சு சர்ச்சையான ஒன்றாக ரசிகர்களிடையே மாறி வருகிறது. அவர் கை பக்கவாட்டில் இருந்து வருவதாலும், மேலும் அவர் கிரீசில் நின்று பந்து வீசுவதாலும் ரசிகர்கள் அவர் பந்தை எறிகிறார் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” நான் இதுகுறித்து எனக்கு தெரிந்த வகையில் கொஞ்சம் விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அவருடைய பந்து வீச்சு சரியா இல்லையா என்பதை ஐசிசி சோதனை மையத்தில் மட்டுமே முடிவு செய்ய முடியும். இங்கு நாமோ அல்லது களத்தில் இருக்கும் நடுவர்களோ அதை முடிவு செய்ய முடியாது”

- Advertisement -

“அவருடைய முழங்கை 15 டிகிரிக்கு கீழே விளையாமல் இருக்க வேண்டும். ஒரு வேலைய அப்படி வளைகிறது என்றால் அதை சோதனை மையத்தின் சோதனை கருவியின் மூலமாகவே நாம் கண்டறிய முடியும். அதே சமயத்தில் கிரீசில் அவர் சில நொடிகள் நின்று பந்து வீசுகிறார். இப்படி பந்து வீசுவது சட்ட விதிகளுக்கு எதிரானது என்று நான் நினைக்கவில்லை. அது சரியான ஒன்றாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles