ஒரேயொரு டெஸ்ட் போட்டி.. 7 சாதனைகளை முறியடிக்க தரமான சான்ஸ்.. வரலாறு படைப்பாரா சுப்மன் கில்?

இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பேட்டிங்கில் சாதனை மேல் சாதனைகளாக படைத்து வருகிறார். எட்ஜ்பாஸ்டன் போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 440 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். அதேபோல் இரட்டை சதம், சதம் என்று விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த நிலையில் நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் சுப்மன் கில் 7 சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து விளையாடியுள்ள 2 போட்டிகளில் சுப்மன் கில் 3 சதங்களை விளாசி இருக்கிறார். லார்ட்ஸ் போட்டியிலும் சதம் அடித்தால், கேப்டனாக ஆடிய முதல் 3 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைப்பார்.

- Advertisement -

148 ஆண்டு கால வரலாறு

148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஜாம்பவான் குக் மட்டும் கேப்டனாக ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களை விளாசியவர். அதேபோல், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 585 ரன்களை சேர்த்துள்ளார். லார்ட்ஸ் போட்டியில் 148 ரன்களை சேர்த்தால், இந்திய கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடிக்க முடியும்.

- Advertisement -

1978-79 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 6 போட்டிகள் 9 இன்னிங்சில் 732 ரன்களை சுனில் கவாஸ்கர் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்துள்ளது. அதேபோல் 18 ரன்கள் சேர்த்தாலே, இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். இதுவரை 4 போட்டிகளில் ராகுல் டிராவிட் 602 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்து வருகிறது.

சுப்மன் கில்லுக்கு சான்ஸ்

அதுமட்டுமல்லாமல் 128 ரன்களை சேர்த்தால், இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய ஜெய்ஸ்வாலின் 712 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும். அதேபோல் 168 ரன்கள் சேர்த்தால், இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கிரஹம் கூச் 752 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்து வருகிறது. அதனை சுப்மன் கில்லால் முறியடிக்க முடியும்.

- Advertisement -

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இந்திய அணி வெற்றி பெற்றால், கபில் தேவ் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பின் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு வென்ற கேப்டன் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெறுவார். தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட யாரும் இதுவரை 1 போட்டிக்கு மேல் இங்கிலாந்து மண்ணில் வென்றதே கிடையாது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles