கடைசி 58 பந்தில் 150 கிளாசென் அபாரம்.. 416 ரன்கள் அடித்து ஆஸியை கலங்கடித்த தென்னாப்பிரிக்கா.!

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் முற்றுப் பயணம் செய்து t20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் ஒரு நாள் போட்டி தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தியது

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒரு நாள் போட்டி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா. இதனைத் தொடர்ந்து இன்று நான்காவது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே தொடங்கியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாபிரிக்க ஒரு நாள் அணியின் கேப்டன் பவுமா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால் துணை எய்டண் மார்கரம் இந்தப் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்தார்.

- Advertisement -

முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் குயின்டன் டிக்காக் மற்றும் ரிசா ஹென்றிக்ஸ் இருவரும் முதலாவது விக்கெட் இருக்கு 64 ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து 28 ரன்களில் ஹென்றிக்ஸ் மற்றும் 45 ரன்கள் எடுத்த டிக்காக் இருவரும் வெளியேறிய பின் வாண்டர்டுசன் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். ஆயினும் கேப்டன் மார்கரம் 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்றிச் கிளாஸன் மற்றும் வாண்டர்டுசன் இருவரும் கூட்டாக 74 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 65 ரன்கள் எடுத்திருந்த வாண்டர்டுசன் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் பினிஷர் டேவிட் மில்லர் ஹென்றிச் கிளாஸனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கங்களுக்கும் பறக்க விட்டது.

- Advertisement -

குறிப்பாக இன்றைய போட்டியில் ஹென்ரிச் கிளாசன் ஆட்டம் அனல் பறந்தது. 57 பந்துகளில் தனது சதத்தை கடந்த இவர் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை ருத்ரதாண்டவம் ஆடினார். மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாஸன் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களைக் கடந்தது.49.5 வது பந்தில் ஆட்டம் இழந்த ஹென்றிச் கிளாஸன் 13 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 174 ரன்கள் எடுத்து ஸ்டோனிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார் . மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாஸன் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தனர். இது தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது சிறந்த ஐந்து விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும்.

இதற்கு முன்பு டேவிட் மில்லர் மற்றும் டுமினி 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது எடுத்த 256 ரன்கள் ஐந்தாவது விக்கெட் கான சிறந்த பாட்னர்ஷிப் சாதனையாக இருக்கிறது. இவர்கள் இருவரது சரவெடியான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 416 ரன்கள் விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. டேவிட் மில்லர் 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளுடன் 82 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணியின் பந்து வீட்டில் ஹேஸல்வுட் இரண்டு விக்கெட் களை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா பத்து ஓவர்கள் வீசி 113 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு நாள் போட்டியில் வீசப்பட்ட மிகவும் மோசமான பந்துவீச்சுகளில் ஒன்றாகும். இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லிவிஸ் பத்துபவர்களுக்கு 113 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கடைசி 9 ஓவர்களில் 164 ரன்கள் சேர்த்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்திருந்த சாதனை, தென்னாப்பிரிக்க அணி வசமே இருந்தது. தற்போது இந்த சாதனையை தென்னாப்பிரிக்க அணியே முறியடித்து இருக்கிறது . கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி பத்துபவர்களில் 163 ரன்கள் தென் ஆப்பிரிக்கா குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது . தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்த சாதனையை தென்னாப்பிரிக்கா முறியடித்து இருக்கிறது. கடைசி 9 ஓவர்களில் மில்லர் மற்றும் கிளாசன் இருவரும் இணைந்து 14 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் 94 பந்துகளில் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles