இந்தியாவின் மிக முக்கிய முதல் தரப் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெற்று 19 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பீகாரைச் சேர்ந்த 12 வயது இளைஞன் வைபவ் சூரியவன்சி முதல் தரப் போட்டியில் அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்கின் ஆரம்ப கால சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்சி கடந்த ஆண்டு இந்தியா பி அண்டர் 19 அணிக்காக விளையாடியதன் மூலம் ஒரு கிரிக்கெட் வீரராக தனது திறமையை நிரூபித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான குவட்ரங்குலர் தொடரில் சிறப்பாக விளையாடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இது ரஞ்சி டிராபியில் அறிமுகமாவதற்கு முன்னர் நடைபெற்ற தொடராகும்.
இவர் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தம் 177 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற வினோ மன்கட் டிராபியில் 5 போட்டிகளில் விளையாடி 393 ரன்கள் குவித்து 78.60 பேட்டிங் சராசரியுடன் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.
வைபவ் ஒரு நேர்காணலில் தனது ஒன்பது வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடத் துவங்கியதாக கூறியுள்ளார். சிறு வயதிலிருந்தே தனது கிரிக்கெட் மீதான காதலால் தனது தந்தையிடம் ஆரம்ப கால பயிற்சிகளை பெற்றார். ஃபுல் சாட் அடிப்பதில் மிகுந்த காதல் கொண்ட இவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறார்.
12 வயதில் ரஞ்சி டிராபியில் அறிமுகமானதால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் ஆரம்ப கால சாதனைகளை முறியடித்து இந்திய முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரின் 12 வயது துல்லியமாக இருந்தால் ரஞ்சித் டிராஃபில் அறிமுகமான முதல் இளம் வீரர் ஆவார். டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் ஆகியோர் இவரை விட மூத்தவர்கள்.
தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் இவரைப் போன்ற இளம் வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இந்தியாவின் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபி, தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் போன்ற தொடர்களின் வருகையினால் இளம் வீரர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்களை இந்திய அணிக்குள் கொண்டு வர மிகப் பெரும் உதவியாக இருந்து வருகிறது. திறமையான இளம் வீரர்களின் வருகையால் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் பெருமளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

