பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் விராட் கோலி போல அதிரடியான முடிவை எடுக்கவில்லை என பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்தார். அவரால் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் பெரிய ஷாட் விளையாடி ரன்கள் எடுக்க முடியாது. இருந்தும் அந்த இடத்தில் விளையாட அவர் சம்மதித்தார்.
இதுகுறித்து பசித் அலி பேசும் போது “பாபர் அசாம் மற்றும் பகார் ஜமான் இருவரும் குரல் அற்றவர்கள் போல இருந்திருக்கிறார்கள். பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் இறங்க வேண்டும் என்று சொன்னதை எப்படி இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை?”
“இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தன்னை கொண்டு வருவார்கள் என விராட் கோலி நினைத்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அப்படி செய்யவில்லை. இந்த நிலையில் அவர் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்து எதிர்ப்பை காட்டினார். இப்படித்தான் பாபர் அசாம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதிர்ப்பை பதிவு செய்யவே இல்லை” என்று கூறி இருக்கிறார்.

