நேத்து நைட்டுதான் கண்டுபிடிச்சேன்.. அர்ஷ்தீப் பவுலிங்ல செம்ம புது ஆயுதத்தை கொண்டு வந்திருக்காரு – ரிக்கி பாண்டிங் ஆச்சரியம்

இந்திய அணியின் நட்சத்திர இடதுகை வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சில் புதிதாக ஒரு ஆயுதத்தை சேர்த்திருப்பதை தான் நேற்று இரவு கண்டுபிடித்து இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். கடந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக அர்ஷ்தீப் சிங் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட்டில் இடதுகை வேகம் பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையை தீர்த்து வைப்பதற்கான ஒரே பவுலராக இவர் இருந்து வருகிறார். மேலும் இவரால் ஆட்டத்தில் எந்த பகுதியிலும் பந்து வீச முடியும் என்பது இந்திய டி20 அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது.

- Advertisement -

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “நான் நேற்று இரவு பார்த்துக் கொண்டிருந்த பொழுது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஒரு புதிய வெரைட்டியை கொண்டு வந்திருப்பதை பார்த்தேன். அதாவது இடதுகை பேட்ஸ்மேனுக்கு உள்ளே வரும் ஸ்விங் பந்து போல, ஒரு மெதுவான பந்தை அவர் வீச ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பந்து அப்படியே வலதுகை பேட்ஸ்மேனுக்கு வெளியில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகவும் புத்திசாலியான பந்துவீச்சாளர். தற்போது இப்படி ஒரு வெரைட்டியையும் கொண்டு வந்திருக்கிறார்” என்று ஆச்சரியமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles