தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் முன்னாள் சிஎஸ்கே வீரர் தீபச் சகர் தான் தோணியிடம் சமீபத்தில் பேசியபோது அவர் என்ன கூறினார்? என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் முக்கிய வெற்றிகளில் தீபக் சகர் பங்கு பெற்றிருக்கிறார். அவர் அந்த அணியின் முக்கிய வீரராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏலத்தின் போது அவரை மீண்டும் சிஎஸ்கே அணியால் வாங்க முடியவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடரில் நேர் எதிராக நிற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் வாங்கப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் சிஎஸ்கே அணியில் விளையாடிய பொழுது தோனியின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தார். தோனி இவரிடம் அடிக்கடி நகைச்சுவையான செயல்களில் இறங்குவது வழக்கம். தற்போதும் அப்படி ஒன்று நடந்திருக்கிறது.
இது குறித்து தீபக் சகர் பேசும் பொழுது “நான் நேற்று மஹி பாயிடம் பேசினேன். நான் சிஎஸ்கே வீடியோக்களை பார்த்தேன் உங்களை நிறைய மிஸ் செய்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் ஒருபோதும் என்னை மிஸ் செய்யவில்லை என்று சொன்னார். மேலும் நான் நேரில் வந்து அவரை சந்திக்கப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் நீ நேரில் சந்திக்க வந்து விடாதே என்று சொன்னார்” என்று கூறியிருக்கிறார்.

