நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி ஏழு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார்.
இதுகுறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும் போது “எங்கள் அணிக்கு ஆரம்பத்தில் ஒரு வெற்றி தேவைப்பட்டது. மூன்று போட்டிகளுக்குப் பிறகு அது கிடைத்ததும் எங்களுடைய வேகம் மாறிவிட்டது. மேலும் சஞ்சு எங்கள் அணிக்கு வந்ததும் இன்னும் மாற்றங்கள் ஏற்பட்டது. தற்போது அவர் எங்கள் அணியில் முதுகெலும்பாக இருக்கிறார்”
“கார்த்திக் சர்மா ஆரம்பத்தில் சில வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. ஆனால் அதற்கு பிறகான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பந்தை வெளியே மட்டும் அடிக்கும் வீரர் கிடையாது சிறப்பாக ஆட்டத்தை நகர்த்தி செல்ல கூடியவர். அவருக்கு நம்பிக்கை கிடைத்திருப்பது நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

