இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல.. இந்த டீம் விடாது.. பெரிய சவால் இவங்கதான் – வருண் ஆரோன் பேச்சு

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்க இருக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எந்த அணி மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்பது குறித்து இந்திய முன்னாள் வேகப் பந்து பேச்சாளர் வரும் ஆரோன் தன்னுடைய கணிப்பை தெரிவித்திருக்கிறார். தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையை தக்க வைக்கும் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து வருண் ஆரோன் பேசும் பொழுது ” இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக நியூசிலாந்து அணிதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடுகிறார்கள். நீங்கள் ஆசியாவுக்கு வரும் பொழுது சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடினால் மட்டுமே உங்களால் வெல்ல முடியும். அதே சமயத்தில் அவர்களுக்கு நல்ல ஐபிஎல் அனுபவமும் இருக்கிறது. மேலும் அவர்களிடம் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்”

- Advertisement -

“மேலும் நியூசிலாந்து அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் என்று பெரிய வீரர்கள் யாரும் கிடையாது. ஆனால் இருக்கும் எல்லா வீரர்களுமே சிறப்பாக செயல்பட கூடியவர்களாக இருப்பது அவர்களுக்கு பெரிய பாசிட்டிவாக மாறுகிறது. அவர்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் ஒருபோதும் போட்டியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களால் ஒரு போட்டியில் பின்னால் இருந்து வந்து கூட வெற்றி பெற முடியும். எனவே நியூசிலாந்து அணி இந்த முறை இந்திய அணிக்கு பெரிய சவாலாக இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles