தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதே சமயத்தில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டி வந்தால் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போது இதற்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பதில் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது ” இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களின் கட்டுப்பாட்டில் கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது எங்களுடைய பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு. இந்த முடிவை மதிப்பதோடு நாங்கள் இந்த விஷயத்தில் எந்த விதத்திலும் தலையிட முடியாது”
“ஒருவேளை இந்திய அணிக்கு எதிராக நாங்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டிய நிலை வந்தால், அதையும் நாங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுதான் முடிவு செய்ய முடியும். நாங்கள் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

