பயிற்சியாளர் பதவி கம்பீர் வேண்டாம்.. தோனியை கொண்டு வாங்க.. காரணம் இருக்கு.. கூறுகிறார் விராட் கோலியின் கோச்

வருகிற டி20 உலகக் கோப்பையோடு ராகுல் டிராவிடின் பயிற்சி காலம் முடிவடைகிறது. புதிய பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதற்கான கடைசி தேதியும் முடிவடைந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் யார் யார் விண்ணப்பித்திருக்கிறார்கள்? என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் வேண்டாம், மகேந்திர சிங் தோனியை பயிற்சியாளராக நியமியுங்கள் என்று விராட் கோலி சிறுவயது கோச் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பல முன்னாள் வீரர்கள் போட்டி போடும் நிலையில் வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் பெரிதாக அடிபட்டன. இதில் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஆன சைமன் டவுல் இந்திய பயிற்சியாளர் பதவியில் அரசியல் இருப்பதாகவும் அதனால் நிராகரித்ததாகவும் வெளிப்படையாகவே கூறினார். இந்த சூழ்நிலையில் ரக்கி பாண்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தன்னை பிசிசிஐ அணுகியதாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ தரப்பில் வெளிநாட்டு வீரர்களிடம் இதுவரை பயிற்சியாளர் பதவிக்கு யாரையும் அணுகவில்லை என்று தெளிவான விளக்கம் அளித்து இருந்தது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது. ஆனால் அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாரா? என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் இந்த விஷயம் தற்போது கேள்விக்குறியை உண்டாக்கி இருக்கிறது.

மேலும் கௌதம் கம்பீர் கண்டிப்பான பயிற்சியாளர் என்பதால் அது விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஒத்து வராது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் கம்பீரின் அந்த கண்டிப்பால்தான் லக்னோ அணி இதுவரை இரண்டு முறை பிளே ஆப் சுற்றுக்கும் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் சர்மா கௌதம் கம்பீருக்கு பதிலாக மகேந்திர சிங் தோனி பயிற்சியாளர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தெளிவான விளக்கம் அளிக்கும்பொழுது
“முதலில் இந்த பயிற்சியாளர் பதவிக்கு எந்த வீரர்கள் வருகிறார்கள் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். இந்த பதவிக்கு ஒரு இந்தியர் வரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். என்னை பொருத்தவரை மகேந்திர சிங் தோனி இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். தோனி மேலும் தற்போது ஓய்வில் இருப்பதால் அவருக்கு இந்த பதவி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படிங்க:இங்கிலாந்து இல்லை.. டி20 உலக கோப்பையை வெல்ல இந்த அணிக்கு தான் வாய்ப்பு அதிகம்.. இயான் மோர்கன் கணிப்பு

தோனிக்கு வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. மகேந்திர சிங் தோனி நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தவர். அவர்களுக்கு வீரர்களை நிர்வகிக்கும் திறன் குறித்து நன்றாக தெரியும். மேலும் அப்போதைய இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இருந்தாலும் அவர்களை திறம்படவே கையாண்டிருக்கிறார். எனவே அவரால் தற்போது இந்த பதவியை மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles