ஓபனிங் எனக்கு செட் ஆகல.. நம்பர் 3ல களமிறங்கவானு கேட்டதுக்கு அவங்க.. உலகக்கோப்பை வென்ற பின்னர் விராட் கோலி பேட்டி

2024 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அதே நம்பிக்கையோடு டி20 உலகக் கோப்பைத் தொடரை எதிர்கொண்டார். ஆனால் அதன் முடிவு இவருக்கு வேறு மாதிரியாக அமைந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நான் திரும்பவும் மூன்றாவது வரிசையிலே களம் இறங்கி விளையாடவா? என்று அணியின் பயிற்சியாளரிடமும் கேப்டனிடமும் கேட்டதாக விராட் கோலி கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலியை சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருந்ததாக கூறப்படும் நிலையில், அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது சொந்த சிபாரிசில் விராட் கோலியை மீண்டும் டி20 அணியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. விராட் கோலி அதற்கு தகுந்தவாறு ஐபிஎல் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்து தொடக்க வரிசையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

அந்த நம்பிக்கையை மெய்ப்படுத்தும் விதமாக டி20 தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அமெரிக்காவில் நடந்த லீக் போட்டிகள் அனைத்துமே சொற்ப ரன்களில் வெளியேறினார். இருப்பினும் சூப்பர் 8 மற்றும் அரை இறுதிப்போட்டியில் திரும்பவும் பேட்டிங் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் விராட் கோலி ஏமாற்றமே அளித்தார்.

இந்த சூழ்நிலையால் நான் திரும்பவும் மூன்றாவது வரிசையிலேயே களமிறங்கி விளையாட அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் கேட்டதாக விராட் கோலி கூறி இருக்கிறார். இது குறித்து விராட் கோலி கூறும் பொழுது “நான் ஒரு உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் என் கனவில் கூட நான் இப்படி ஒரு நிகழ்வை சந்தித்ததில்லை. இந்த டி20 தொடரில் எனது பேட்டிங் ஃபார்ம் எனக்கு ஒரு மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது. நீங்கள் எப்போது உங்களை பெரிய ஆள் இல்லை என்ற உணர்வீர்களோ அப்போதுதான் எல்லாமே சரியாக மாறும். எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் நிலைமை அப்படியே இதற்கு நேர எதிராக மாறும்.

- Advertisement -

இறுதிப் போட்டியின் போது எனக்கு பாதுகாப்பில்லாத ஒரு உணர்வு உண்டானது உண்மைதான். ஆனால் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த டி20 உலக கோப்பை தொடரில் நான் தொடக்க வரிசையில் களமிறங்கி சொதப்பிய போது பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் மூன்றாவது வரியில் களமிறங்கவா? என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர். அதனால்தான் என்னால் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட முடிந்தது.

இதையும் படிங்க:உங்கள் வலியை என்னால் உணர முடியும்.. இன்னும் பல சாதனைகள் நீங்கள் செய்ய வேண்டும்- சச்சின் உணர்ச்சிகரமான பதிவு

இறுதிப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்து விட்டனர். இது ஒரு அற்புதமான நிகழ்வு. இதுவே எனது கடைசி டி20 தொடராக இருக்கும். இளைஞர்களுக்கு வழி விடும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles