மறந்த மாதிரி கூட அந்த தப்பை மறுபடியும் பண்ணிராதீங்க கோலி.. செமில ஏன் தோத்தோம்னு ஞாபகம் வச்சுக்கோங்க ரோகித்.. வேண்டுகோள் விடுக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

டி20 கிரிக்கெட் உலக கோப்பையை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் அணியை நிர்ணயிக்கப் போகும் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்திய அணி கடைசியாக 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி தலைமையிலும், ரோஹித் சர்மா தலைமையிலும் உலகக்கோப்பை தொடர்களில் தோல்வியையே தழுவி இருக்கிறது. தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியே மீண்டும் உலக கோப்பை தொடரில் களம் இறங்க உள்ளது. நவீன கிரிக்கெட்டில் நட்சத்திரங்களாக கருதப்படும் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஜாம்பவான்களாக திகழ்கின்றனர்.

- Advertisement -

ஆனால் முக்கியமான நாக் அவுட் சுற்றில் கடந்த 10 வருடங்களாக இந்திய அணி பெரிய தொடர்களில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்த நிலையில் 2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருக்கிறார். அதேபோல அப்போட்டியில் 40 பந்துகளில் 50 ரன்கள் குவித்த விராட் கோலி மீண்டும் அதுபோல நங்கூரமாக விளையாடாமல் அதிரடியாக விளையாட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. குறிப்பாக 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்கள் மட்டுமே குவித்தது. ரோகித் சர்மா 28 பந்தல் 27 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் குவித்தனர். நல்லவேளையாக அப்போது ஹர்திக் பாண்டியா இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 63 எண்கள் குவிப்பார்

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து அணி அதனை 16 ஓவரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை படுதோல்விக்கு உள்ளாக்கியது. எனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த உலகக்கோப்பையில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தற்போது எழுந்துள்ள அதிகப்படியான விமர்சனங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளை விடவும் விராட் கோலி தற்போது பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:விவாகரத்து என்பதெல்லாம் பொய்.. இது ஹர்திக் பாண்டியாவே போடும் நாடகம்.. கூறுகிறார் பிரபல நடிகர் ரோகித் குப்தா

ஆனால் நாக் அவுட் போட்டியில் இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடுவதை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாட வேண்டும் அப்போதுதான் அனைத்து நன்மை பயக்கும்” என்று கூறி இருக்கிறார். விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங்கை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றி இருக்கிறார். இவரது அதிரடி டி20 உலக கோப்பையிலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles