பிளாங்க் செக்லாம் வேண்டாம்.. எனக்கு இந்தியாதான் முக்கியம்.. கௌதம் கம்பீர் செய்த காரியம்.. நடந்தது என்ன?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலக கோப்பையோடு முடிவடையுள்ள நிலையில், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமானது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் பதவிக்காக இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் விருப்பம் தெரிவித்ததாகவும், பிசிசிஐ ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களை அணுகியதாகவும் தகவல்கள் வெளியானது. முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான ஜஸ்டின் லாங்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரை அணுகியதாகவும் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா எந்த ஆஸ்திரேலியா வீரரை அணுகவில்லை என்றும் விரைவில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்தார். இந்திய அணியை சரியாக வழிநடத்த இந்திய வீரர் ஒருவர்தான் பயிற்சியாளராக வரவேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கௌதம் கம்பீரை அணுகியதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாரூக்கான் அடுத்த பத்து வருடத்திற்கு கொல்கத்தா அணியை நீங்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்றும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு பிளாங் செக்கை கௌதம் கம்பீரிடம் கொடுத்ததாகவும் கிரிக்கெட்டின் நெருங்கிய வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் கௌதம் கம்பீரின் சிறப்பான வழிகாட்டுதலின் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கௌதம் கம்பீரின் முடிவு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர முடிவெடுத்து இருப்பதாகவும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கம்பீர், விரைவில் அந்த பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு இந்திய அணியின் முழு நேர பயிற்சியாளராக செயல்பட போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் கொடுத்த செக்கையும் வேண்டாம் என்று மறுத்து விட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.

இதையும் படிங்க:பணம் இல்லாத போது பணத்தின் அருமை அறிந்தவன் நான்.. எனக்கு இதுவே பெரிது.. குறைவான சம்பளம் குறித்த கேள்விக்கு ரிங்கு சிங்கின் பதில்

கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்றால் அது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு மட்டுமின்றி இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலாக இருக்கும். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நிச்சயமாக ஐசிசி கோப்பைகளை வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் தலைமையின் கீழ் இந்திய அணி தற்போது வரை எந்த ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles