கம்பீர் இல்லை.. இந்திய அணியின் பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள மற்றொரு முன்னாள் தமிழக வீரர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் சூப்பர் 8 போட்டிகள் இந்திய அணிக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

இதற்காக இந்திய அணி மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் டிராவிட் விலக இருக்கிறார்.

- Advertisement -

தனது சொந்த வேலைகளை கவனிக்க போதிய நேரம் இல்லாததால் தற்போது இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவரே அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று இந்திய அணிய நிர்வாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல வெளிநாட்டு வீரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

வெளிநாட்டு வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர் பதவிக்கு வர விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி பல தகவல்கள் வெளிவந்த நிலையில், கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்த இந்தியாவின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கம்பீரிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கம்பீரும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதனால் கௌதம் கம்பீர் தான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வரப் போகிறார் என்று அனைவரது மத்தியிலும் நம்பப்பட்டது. இதற்கான நேர்காணல் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அதில் கௌதம் கம்பீர் மட்டுமல்லாமல் மற்ற தமிழகம் முன்னாள் வீரருமான டபுள் யு வி ராமனும் நேர்காணலில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது.

இதையும் படிங்க:தோனியின் செல்லப் பெயரை ரொனால்டோவுக்கும் வைத்த பிஃபா.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் ‘தல’.. முழு விபரம்

இந்த நேர்காணலில் கம்பீரை விட டபுள்யு வி ராமன் கொடுத்த விளக்கங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு போதுமானதாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி டபிள்யூ வி இராமனை இந்திய நிர்வாகம் ஏற்றுக் கொண்டால் அவரே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் விரைவில் முடிவடைய உள்ளதால் இதன் அதிகாரப்பூர்வ தகவல் இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles