மாஸ் காட்டிய இந்திய அணி.. 112 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனை.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியுற்ற பிறகும் அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஏற்படுத்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் பாணியை மாற்றுவதாக சூளுரைத்தது. இதற்காக இங்கிலாந்து அணியில் அறிமுகமே ஆகாத மூன்று அறிமுக சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி தொடருக்காக அறிமுகப்படுத்தியது. இந்தியாவைத் தவிர வேறு எங்க டெஸ்ட் தொடர் நடந்தாலும் டெஸ்ட் தொடரை இழக்காமல் வெற்றிகரமாக வீறு நடை போட்டுக் கொண்டிருந்தது .

- Advertisement -

பிறகு சொன்னதைப் போலவே இந்தியாவிலும் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்திய அணியும் முன்னணி வீரர்களின் காயம் மற்றும் விலகல் என அடுத்தடுத்த தொடர் பிரச்சனைகளை சந்தித்து வந்தது. பின்னர் சுதாரித்துக் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய இளம் படை தோல்விக்கான காரணத்தை ஆராயத் தொடங்கியது.

- Advertisement -

இந்திய இளம் வீரர்களான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரேல் ஆகிய இளம் திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்தது. இதனைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர்களும் அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தங்கள் திறமையினை நிரூபித்தனர்.

அதாவது அனுபவமிக்க இங்கிலாந்து அணி ஓரளவு அனுபவமே இல்லாத இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பிறகு நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய மண்ணில் இந்திய அணி தான் எப்பவுமே ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

முதல் போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும், பிறகு நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் நான்கிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி 112 வருடங்களில் முதல் போட்டியில் தோல்வியுற்று 4-1 இன்று கணக்கில் வெற்றி பெற்றுள்ள ஒரே அணி என்ற வரலாற்று சிறப்புமிக்க பெருமை படைத்து இருக்கிறது. அடுத்தடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் எந்த அணியும் செய்ய முடியாத சாதனையே ஆகும்.

மகிழ்ச்சியில் திளைத்துள்ள இந்திய அணி அடுத்தது உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய இளம் படையும் இந்த முறை உலக கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற ஆவலில் கோப்பையை வெல்ல உத்வேகம் காட்டி வருகின்றனர். ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்காக ஒரு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து விட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles