அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை.. மிரண்ட கிரிக்கெட் உலகம்

இந்திய கிரிக்கெட் அணி இந்த டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று 17 வருட ஏக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி உலகக் கோப்பையை வெற்றி பெற்றதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெயிஷா மிகப்பெரிய தொகையை இந்திய அணியினருக்கு பரிசாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி டி20 கிரிக்கெட்டின் தொடக்கத்தில் 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சியில் அடுத்தடுத்து டி20 உலக கோப்பை வெல்ல முடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளானது. தோனிக்கு பிறகு விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்ற போதிலும் அவராலும் டி20 உலக கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

- Advertisement -

2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதால், பிரபலமான பிரான்சைஸ் கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்திய நிர்வாகத்தால் டி20 உலக கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தது. இவை அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டாவது முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் இந்திய அணி தற்போது அதனை சமன் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் பிசிசிஐ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை விட இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ஐந்து மடங்கு அதிகமான தொகையை அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இதை தற்போது கிரிக்கெட் உலகமே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் 17 வருடங்களாக டி20 உலக கோப்பையை கைப்பற்றாத நிலையில் தற்போது இந்தியா கைப்பற்றியிருந்தால் அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா இதனை அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:உலகக்கோப்பை எங்கள் உணர்வு.. கோப்பையில் கால் வைத்த மார்ஸ் எங்க.. நம்மை இந்திய கேப்டன் எங்க.. வைரலாகி வரும் புகைப்படம்

இதுகுறித்து ஜெய்ஷா விரிவாக கூறும்பொழுது ” டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணிக்கு 25 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர் முழுவதுமாக இந்திய கிரிக்கெட் அணி தன்னம்பிக்கை, திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மகத்தான சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஆகியோருக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles