சூரியகுமார் பிடிச்சது கேட்ச் இல்ல.. பௌண்டரி லைன் தள்ளி வைத்து ஏமாத்திட்டாங்க.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பொல்லாக்

ஒன்பதாவது டி20 உலக கோப்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது இரண்டாவது முறையாக உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இறுதிப் போட்டியில் சூரியகுமார் பிடித்த கேட்ச் சர்ச்சையாகி வரும் நிலையில் அதற்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க விக்கட்டுகள் விரைவில் வீழ்ந்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கிளாஸன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

- Advertisement -

பின்னர் அவரும் வெளியேற, தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற கடைசி ஆறு பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீச, டேவிட் மில்லர் களத்தில் இருந்தார். அப்போது அவர் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்த மில்லர் லாங் ஆன் திசையில் நின்றிருந்த சூரியகுமார் யாதவ் அதை அற்புதமாக கேட்ச் பிடிக்க, நிலைத்தடுமாறிய நிலையில் பந்தை வெளியே காற்றில் வீசிவிட்டு அவர் பௌண்டரி லைனுக்குள் சென்று திரும்பவும் வெளியே வந்து காற்றில் வீசிய பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையையும் கைப்பற்றியது. சொல்லப்போனால் அவர் கேட்ச் பிடிக்கவில்லை. உலகக்கோப்பையைத்தான் கீழே விழாதவாறு பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் கேட்ச் பிடித்த வீடியோவை ஜூம் செய்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை ரசிகர்கள் சூரியகுமார் யாதவின் காலின் நுனிப்பகுதி பௌண்டரி எல்லையில் பட்டதாக கூறி, இது அவுட் கிடையாது இது தவறான அவுட் என்றும் அம்பயரை இந்தியா வாங்கி விட்டது என்றும் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர். அதுமட்டுமல்லாமல் பௌண்டரி எல்லையில் இருந்த கயிறை வேண்டுமென்றே இரண்டடி பின் நகர்த்தி வைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் பத்திரிகை ஊடகமான டைம்ஸ் ஆப் கராச்சியில் தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் பொல்லாக்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து விரிவாக கூறிய பொல்லாக் “சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் அற்புதமாக இருந்தது. அவர் பந்தினை அபாரமாக கணித்து அற்புதமாக கேட்ச் செய்து பிடித்தார். ஆனால் பௌண்டரி லைன் நகர்த்தப்பட்டு இருப்பது அதற்கும் சூரியகுமார் யாதவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் அந்த குஷன் மீது நிற்கவில்லை. அது விளையாட்டின் போக்கில் மட்டுமே இருந்தது.

இதையும் படிங்க:அடி தூள்.. தினேஷ் கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்.. ஆர்சிபியில் இரண்டு முக்கிய பதவி.. புது அவதாரம் எடுக்க உள்ள டிகே

சூரியகுமார் யாதவ் இந்த கேட்டை புத்திசாலித்தனமாக பிடித்தார்” என்று பரவி வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles