உலகக்கோப்பை வென்ற தினம்.. மார்பில் பச்சை குத்த போகும் இந்திய வீரர்.. இதுதான் காரணம்

2024ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி இந்திய அணிக்கு மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு 17 வருடங்கள் கழித்து மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

- Advertisement -

மேலும் அந்த நாளை தனது மார்பில் பச்சை குத்த போவதாக இந்திய வீரர் ஒருவர் கூறியிருக்கிறார். மேலும் மற்றொரு காரணத்தால் அந்த நாள் தனக்கு நெருக்கமானதாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக விளங்கும் இந்திய அணி, ஐசிசி தொடரை வென்று கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆகிய நிலையில், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்கு ஏற்றவாரே ரோகித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக அந்த போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

- Advertisement -

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான இந்திய அணி இந்த முறை டி20 உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்று இந்திய வீரர்கள் உறுதிமொழி எடுத்து அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் பறந்தனர். அங்கு அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என வளமான முன்னணி அணிகளை வீழ்த்தி விட்டு தற்போது வெற்றிக்கொடி ஏந்தி இருக்கிறது.

அதோடு இந்திய கிரிக்கெட்டில் இருந்து டி20 ஃபார்மெட்டில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். டி20ல் இருந்து ஓய்வு பெற இதை விட சிறந்த தருணம் அவர்களுக்கு அமையாது. இதனால் அனைவரும் இந்த மூன்று வீரர்களின் பாராட்டி வரும் வேளையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் டி20 உலக கோப்பையை இந்தியா வென்ற நாளை தனது நெஞ்சில் பச்சை குத்தப் போவதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சூரியகுமார் யாதவ் விரிவாக கூறும்பொழுது ” 2023ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றால் அப்போதே பச்சை குத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். எதிர்பாராதவிதமாக அப்போது நாங்கள் வெல்லவில்லை. ஆனால் இந்த டி20 உலக கோப்பையை வென்றுள்ளோம். எனவே அந்த தினத்தையும் உலகக் கோப்பை டிராஃபியையும் என் நெஞ்சில் பச்சை குத்த போகிறேன். மேலும் அந்த நாள் என் தங்கையின் பிறந்த நாளாக அமைவதால் அது அவருக்கு கூடுதல் பரிசாக அமையும்.

இதையும் படிங்க:ஆட்டநாயகன் விருது கோலிக்கு அல்ல.. இவருக்கு போயிருக்கணும்.. ஆனா இந்தியா தோத்துருந்தா காரணம் கோலிதான்- மஞ்ச்ரேக்கர் கருத்து

இது என் வாழ்நாளில் நான் எப்போதும் மறக்கக்கூடாது என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும் உலகக் கோப்பை வென்றது என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது எப்போதும் என் நினைவில் இருக்கும்” என்று சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles