ஒரே நாளில்.. 2 இந்திய வீரர்களின் நம்பர் 1 இடம் காலி.. பிசிசிஐ முடிவால் நடந்த சோகம்.. ஐசிசி ரேங்கில் என்ன நடந்தது.?

ஐசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இரண்டு இந்திய வீரர்கள் பின்தங்கியுள்ளனர், பிசிசிஐ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக, சுழற்சி முறையை பயன்படுத்துவது, இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

- Advertisement -

நவம்பர் மாதம் இறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய், டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். சமீபத்தில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா சமனில் முடித்தது. மூன்று போட்டி கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த முடிவினால் ரவி பிஷ்னோய் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார்.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டி டி20 தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அதில் ரசித் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 பந்துவீச்சாளருக்கான பட்டியலில், கிரேம் ஸ்வானுக்கு பிறகு டி20 பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். டி20 பந்துவீச்சாளர்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தை ரசித்த காணும், மூன்றாவது இடத்தை ரவி பிஷ்னோயும் பகிர்ந்துள்ளனர். டி20 பேட்ஸ்மனுக்கான தரவரிசையில் தொடர்ந்து சூரிய குமார் யாதவ் முதலிடத்தில் தொடர்கிறார். டி20 ஆல்ரவுண்டர் தர வரிசையில் முதலிடத்தில் சகிப் அல் ஹாசன் முதல் இடத்திலும் ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சுப்மன் கில், சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டதன் மூலம் சுப்மன் கில் முதலிடத்தை இழந்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்க்கான தரவரிசையில் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இரண்டாவது இடத்தில் சுபன் கில்லும், மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கான தரவரிசையில் கேசவ் மகாராஜா முதலிடத்திலும், இந்தியாவை சேர்ந்த முகமது சிராஜ் மூன்றாவது இடத்திலும் உள்ளார். டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், ரோகித் சர்மா பத்தாவது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டு தர வரிசையில், முதல் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், இரண்டாவது இடத்தில் அஸ்வினும் பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles